

சென்னை,
தமிழகத்தில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். இதையடுத்து, முதல்வர் பழனிசாமியை அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று நகைச்சுவை நடிகர் சூரி முதல்வரை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்தார். அப்போது, முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு மலர் கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.