மறைந்த கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்தில் நடிகர் சூர்யா அஞ்சலி

கேப்டன் விஜயகாந்த் உடல் நலக் குறைவு காரணமாக கடந்த மாதம் 28 ஆம் தேதி காலமானார்.
மறைந்த கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்தில் நடிகர் சூர்யா அஞ்சலி
Published on

சென்னை,

தேமுதிக நிறுவன தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் உடல் நலக் குறைவு காரணமாக கடந்த மாதம் 28 ஆம் தேதி காலமானார். பின்னர் அடுத்த நாள் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர் சூர்யா அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சூர்யா கூறியதாவது,

அண்ணனின் பிரிவு ரொம்ப துயரமானது. பெரியண்ணா படத்தில் அவருடன் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இறுதியாக அவரின் முகத்தை பார்க்க முடியாதது எனக்கு ஈடு செய்ய முடியாத இழப்புதான். எப்போதும் அவரின் நினைவு இருக்கும். நடிகர் சங்க கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயர் சூட்டுவதற்கு, எனக்கு சம்மதமே. நடிகர் சங்கத்தை மீட்டெடுத்ததில் அவருக்கு பெரும் பங்கு உண்டு. இவ்வாறு கூறினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com