நடிகர் வடிவேலு பட காமெடி பாணியில் தூய்மை விழிப்புணர்வு பதாகை

நடிகர் வடிவேலு பட காமெடி பாணியில் தூய்மை விழிப்புணர்வு பதாகை வாசகங்கள் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.
நடிகர் வடிவேலு பட காமெடி பாணியில் தூய்மை விழிப்புணர்வு பதாகை
Published on

காஞ்சீபுரம் மாநகராட்சி 51 வார்டுகளை உள்ளடக்கியது. இதனை 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகளின் அறிவுறுத்தலின்படி தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி அதன் பேரில் வீடுகளுக்கே சென்று தூய்மை பணியாளர்கள் குப்பைகளை சேகரிக்கின்றனர்.

ஆனாலும் நள்ளிரவு நேரங்களில் வீட்டின் கட்டிட கழிவுகள், தேவையற்ற பொருட்களை பொதுமக்கள் சாலையோரத்தில் வீசி விட்டு செல்கின்றனர்.

இதையடுத்து தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு ஏற்படுத்த மாநகராட்சி அந்தந்த பகுதி மண்டல அலுவலருக்கு அறிவுறுத்தியது. அதன்பேரில், காஞ்சீபுரம் மாநகராட்சி பகுதியான ஐதர் பேட்டை பகுதியில் துப்புரவு ஆய்வாளர் மற்றும் தூய்மை பணியாளர்கள் பெயர் மற்றும் அவர்களது தொலைபேசி எண்களுடன், நகைச்சுவை நடிகரான வடிவேலுவின் 'வின்னர்' பட காமெடியான "இந்த கோட்டை தாண்டி நீயும் வரக்கூடாது... நானும் வரமாட்டேன்..." எனும் காமெடி பாணியில் விழிப்புணர்வு பதாகை வைக்கப்பட்டுள்ளது. அதில் 'வின்னர்' படத்தில் வரும் வடிவேலுவின் 'கைப்புள்ள' காதாபாத்திரத்தின் படத்துடன், "இங்கு குப்பை கொட்ட நீங்களும் வரக்கூடாது, நானும் வரமாட்டேன்" என்ற வாசகங்கள் இடம்பெற்று இருந்தது. இது அந்த பகுதி பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com