பனையூர் இல்லத்தில் மாவட்ட பொறுப்பாளர்களுடன் நடிகர் விஜய் ஆலோசனை

தமிழகத்தின் 234 தொகுதிகளைச் சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
பனையூர் இல்லத்தில் மாவட்ட பொறுப்பாளர்களுடன் நடிகர் விஜய் ஆலோசனை
Published on

சென்னை,

பனையூரில் உள்ள அலுவலகத்தில் இயக்க நிர்வாகிகளை அவ்வப்போது சந்திக்கும் நடிகர் விஜய், இயக்கத்தை விரிவுபடுத்த பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். அவரது அறிவுறுத்தலின்படி, அம்பேத்கர் பிறந்தநாளன்று அவரது சிலைக்கு மக்கள் இயக்க நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இப்தார் நிகழ்ச்சிகளை நடத்தினர். கடந்த மாதம் 28-ம் தேதி உலக பட்டினி தினத்தில் 234 தொகுதிகளிலும் 'தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம்' திட்டம் மூலம் ஏழைகளுக்கு மக்கள் இயக்க நிர்வாகிகள் மதிய உணவு வழங்கினர்.

அண்மையில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தொகுதி வாரியாக 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளை நடிகர் விஜய் சந்தித்து ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார். ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது என மாணவர்கள் மத்தியில் நடிகர் விஜய் பேசியிருந்தது தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியது.

இந்த நிலையில், நடிகர் விஜய் பனையூர் இல்லத்தில் மாவட்ட பொறுப்பாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தின் 234 தொகுதிகளைச் சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். தொகுதி பொறுப்பாளர்கள், அணி தலைவர்கள் என சுமார் 300 பேர் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். முன்னாதாக ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகளுக்கு அறுசுவை உணவுடன் மதிய விருந்து வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com