நடிகர்கள் கைதான போதைப்பொருள் வழக்கு: போலீஸ் அதிகாரிகளுக்கு லட்சக்கணக்கில் பணம் கைமாறியதாக புகார்


நடிகர்கள் கைதான போதைப்பொருள் வழக்கு: போலீஸ் அதிகாரிகளுக்கு லட்சக்கணக்கில் பணம் கைமாறியதாக புகார்
x

போதைப்பொருள் வழக்கை விசாரித்த தனிப்படையில் இடம் பெற்றிருந்த போலீஸ் அதிகாரிகளுக்கு லட்சக்கணக்கில் பணம் கைமாறியதாக புகார் எழுந்தது.

சென்னை,

'கொகைன்' போதைப்பொருள் வழக்கில் சமீபத்தில் பிரபல நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா மற்றும் போதைப் பொருள் வியாபாரி கெவின் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். நடிகர்கள் ஸ்ரீகாந்தும், கிருஷ்ணாவும் நிபந்தனை ஜாமீனில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அவர்கள் விசாரணை அதிகாரி முன்பு தினமும் ஆஜராகி கையெழுத்து போட்டு வருகிறார்கள்.

தற்போது இந்த வழக்கு தொடர்பாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த போதைப்பொருள் வழக்கை விசாரித்த தனிப்படையில் இடம் பெற்றிருந்த போலீஸ் அதிகாரிகளுக்கு லட்சக்கணக்கில் பணம் கைமாறியதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக உயர் அதிகாரிகள் மட்டத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் புகார் கூறப்பட்ட இன்ஸ்பெக்டர் சுதாகர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமகிருஷ்ணன், அருள் மணி ஆகியோர் நேற்று முன்தினம் இரவு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். விசாரணை முடிவில் இவர்கள் மீது இலாகாபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

1 More update

Next Story