‘பெப்சி’ தொழிலாளர்களுக்கு நடிகர்கள் சூர்யா-கார்த்தி ரூ.10 லட்சம் உதவி

‘பெப்சி’ தொழிலாளர்களுக்கு நடிகர்கள் சூர்யா-கார்த்தி ரூ.10 லட்சம் நிதி உதவி அளித்தனர்.
‘பெப்சி’ தொழிலாளர்களுக்கு நடிகர்கள் சூர்யா-கார்த்தி ரூ.10 லட்சம் உதவி
Published on

சென்னை,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. பொதுமக்கள் அதிகமாக கூடும் வணிக நிறுவனங்கள், சினிமா தியேட்டர்கள் ஆகியவை மூடப்பட்டன. படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனால் தினக்கூலியாக இருக்கும் திரைப்பட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அன்றாட செலவுக்கே பணம் இல்லாமல் வறுமையில் வாடுகிறார்கள்.

அவர்களுக்கு உதவும்படி, பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள் விடுத்து இருந்தார். அதை ஏற்றுக்கொண்டு நடிகர் சிவகுமார், அவருடைய மகன்கள் நடிகர் சூர்யா, கார்த்தி ஆகிய மூன்று பேரும் பெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்கியிருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com