பா.ஜ.க.வில் இருந்து விலகுவதாக நடிகை கவுதமி அறிவிப்பு...!

மிகுந்த வேதனையுடன் கட்சியில் இருந்து விலகுவதாக நடிகை கவுதமி தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க.வில் இருந்து விலகுவதாக நடிகை கவுதமி அறிவிப்பு...!
Published on

சென்னை,

பாஜகவிலிருந்து விலகுவதாக நடிகை கவுதமி அறிவித்துள்ளார். மிகுந்த வேதனையுடன் கட்சியில் இருந்து விலகுவதாக நடிகை கவுதமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கவுதமி பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய பாஜக தலைமைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்,

கனத்த இதயத்தோடு பாஜகவில் இருந்து விலகுகிறேன். 25 ஆண்டுகளாக பாஜகவின் வளர்ச்சிக்கு நேர்மையுடன் உழைத்துள்ளேன். 2021 தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் கட்சிப்பணி ஆற்றினேன். ஆனால், சீட் கிடைக்கவில்லை.

அழகப்பன் என்பவர் தன்னிடம் இருந்து பணம், சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவற்றை மோசடி செய்ததாக புகார் அளித்திருந்தேன். ஆனால் தற்போது அழகப்பனுக்கு ஆதரவாக பாஜகவின் மூத்த நிர்வாகிகள் செயல்படுகின்றனர்.

பாஜக வளர்ச்சிக்கு கடுமையாக உழைத்தும் எனக்கு கட்சியில் ஆதரவு இல்லை. எனவே மிகுந்த வேதனையுடன் கட்சியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com