நடிகை விவகாரம் - மன்னிப்பு கோரினார் ஏ.வி.ராஜு

தன்னுடைய பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக ஏ.வி.ராஜு விளக்கம் அளித்துள்ளார்.
நடிகை விவகாரம் - மன்னிப்பு கோரினார் ஏ.வி.ராஜு
Published on

சேலம்,

சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்த ஏ.வி.ராஜு, அண்மையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து அவர் அளித்த பேட்டியில், கடந்த 2017 -ம் ஆண்டு கூவத்தூர் தனியார் விடுதியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.,க்கள் தங்கியிருந்தபோது, நடிகைகள் அழைத்து வரப்பட்டதாகக் கூறியதுடன், நடிகை திரிஷாவின் பெயரையும் வெளிப்படையாக குறிப்பிட்டிருந்தார்.

இது சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த பிரச்சினைக்கு இயக்குநர் சேரன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த பிரச்சினைக்கு நடிகை திரிஷா தனது எக்ஸ் தளத்தில் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

சேரன் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் பலரும் இந்த விவாகாரத்திற்கு கண்டனம் தெரிவித்த நிலையில் ஏ.வி.ராஜு மன்னிப்பு கோரியுள்ளார்.

இயக்குநர் சேரன், நடிகர் விஷால் மற்றும் திரைத்துறையினரிடம் மன்னிப்பு கேட்பதாக ஏ.வி.ராஜூ கூறியுள்ளார். தன்னுடைய பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்றும் ஏ.வி.ராஜு விளக்கம் அளித்துள்ளார்.

அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நடிகை திரிஷா அறிவித்த நிலையில் தற்போது மன்னிப்பு கேட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com