நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த நடிகை கஸ்தூரி எழும்பூர் கோர்ட்டில் மனு தாக்கல்

நிபந்தனை தளர்வு கோரி எழும்பூர் கோர்ட்டில் நடிகை கஸ்தூரி மனு தாக்கல் செய்துள்ளார்.
நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த நடிகை கஸ்தூரி எழும்பூர் கோர்ட்டில் மனு தாக்கல்
Published on

சென்னை,

சென்னையில் கடந்த 3-ந் தேதி பிராமணர் சமூகத்தினர் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து அவர் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார். இதனிடையே நடிகை கஸ்தூரி மீது சென்னை உள்ளிட்ட பல இடங்களில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், முன்ஜாமீன் கோரி கஸ்தூரி தாக்கல் செய்த மனு கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து நடிகை கஸ்தூரி தலைமறைவானதாக கூறப்பட்ட நிலையில், அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். பின்னர் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடிகை கஸ்தூரி கைது செய்யப்பட்டு சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். பின்னர் எழும்பூர் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில், எழும்பூர் கோர்ட்டு அவருக்கு ஜாமின் வழங்கியது.

அதன் அடிப்படையில் தினமும் காலை 10 மணிக்கு, எழும்பூர் காவல் நிலையத்தில் நடிகை கஸ்தூரி கையெழுத்திட்டு வருகிறார். இந்த நிலையில், ஜாமீன் நிபந்தனைகளை தளர்வு செய்யக்கோரி, சென்னை எழும்பூர் கோர்ட்டில் கஸ்தூரி மனு தாக்கல் செய்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com