கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் கோவை சரளா

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் நகைச்சுவை நடிகை கோவை சரளா இணைந்தார்.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் கோவை சரளா
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகையாக இருப்பவர் கோவை சரளா. நூற்றுக்கணக்கான படங்களுக்கும் மேல் நடித்துள்ள கோவை சரளா இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. முந்தானை முடிச்சு படத்தில் அறிமுகமான கோவை சரளா கதாநாயகியாக நடித்த ஒரே படம் கமல்ஹாசனின் சதிலீலாவதி. இந்த படத்தில் கமலுக்கு மனைவியாக நடித்து இருப்பார். சினிமாவை தாண்டி வேறு எந்த பொது நிகழ்ச்சியிலும் பார்க்க முடியாத கோவை சரளா இன்று அரசியலுக்குள் நுழைந்தார். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்துள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் கமல்ஹாசன் முன்னிலையில் இன்று சர்வதேச மகளிர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கட்சி செயற்குழு உறுப்பினர்கள் கமீலா நாசர், ஸ்ரீபிரியா உள்பட பெண் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com