நடிகை வரலட்சுமி திருமணம்; எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அழைப்பிதழ் வழங்கிய சரத்குமார்

எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து, நடிகர் சரத்குமார் தனது மகளின் திருமணத்திற்கான அழைப்பிதழை வழங்கினார்.
Sarathkumar gave invitation to Edappadi Palanisami
Published on

சென்னை,

நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமி சரத்குமாருக்கும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிகோலாய் சச்தேவுக்கும் இரு வீட்டார் பெற்றோர்கள், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் கடந்த மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களது திருமணம் அடுத்த மாதம் தாய்லாந்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் சரத்குமார், ராதிகா ஆகியோர் சினிமா பிரபலங்களையும், அரசியல் தலைவர்களையும் சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கி வருகின்றனர். சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து அழைப்பிதழ் வழங்கினர். இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து, நடிகர் சரத்குமார் தனது மகளின் திருமணத்திற்கான அழைப்பிதழை வழங்கினார். இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com