இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்: 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன் - போக்சோவில் வழக்குப்பதிவு


இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்: 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன் - போக்சோவில் வழக்குப்பதிவு
x

கோப்புப்படம் 

நட்பில் தொடங்கி காதலாக மாறிய நிலையில், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஓடும் மின்சார ரெயிலில் சிறுவன் சிறுமிக்கு தாலி கட்டியுள்ளார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளிகளான தம்பதிக்கு 16 வயதில் மகள் உள்ளார். 5-ம் வகுப்பு வரை மட்டுமே படித்த அந்த சிறுமி, பெற்றோர் வேலைக்குச் சென்ற நேரங்களில் செல்போனில் அதிக நேரத்தை செலவழித்து உள்ளார். அப்போது இன்ஸ்டாகிராம் மூலம் சென்னையைச் சேர்ந்த 16 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நட்பில் தொடங்கி பின்னர் காதலாக மாறிய நிலையில், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஓடும் மின்சார ரெயிலில் சிறுவன் சிறுமிக்கு தாலி கட்டியுள்ளார். அதன் பின்னர் பலமுறை இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் வெளியே யாருக்கும் தெரியாமல் இருவரும் தங்களது வீட்டில் வழக்கம்போல் வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், சிறுமிக்கு தொடர்ந்து வயிற்று வலி ஏற்பட்டதால், அவரது தாய் சென்னை அரசு மருத்துவனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார். அங்கு மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில், சிறுமி 3 மாத கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமான சென்னையைச் சேர்ந்த 16 வயது சிறுவன் மீது கும்மிடிப்பூண்டி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 More update

Next Story