9,219 புதிய வாக்காளர்கள் சேர்ப்பு

9,219 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர்.
9,219 புதிய வாக்காளர்கள் சேர்ப்பு
Published on

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் 2023-ம் ஆண்டு சிறப்பு சுருக்க முறை திருத்த பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு சுருக்க முறை திருத்தம் அடுத்த மாதம் (டிசம்பர்) 8-ந் தேதி வரை நடைபெறவுள்ளது. இச்சுருக்க முறை திருத்தம் தொடர்பாக வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 9-ந்தேதி வெளியிடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் முதல் நேற்று வரை திருச்சி மாவட்டத்தில் உள்ள அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடைபெற்றது.

இதில் 18 வயது நிரம்பியவர்கள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் படிவம் 6-ஐ பூர்த்தி செய்து, தங்களது வயது மற்றும் இருப்பிடத்திற்குரிய ஆவணங்களுடன் 9,219 பேர் புதியதாக வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்த்துக் கொண்டனர். தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைக்காத வாக்காளர்கள் 1,179 பேர் படிவம்-6 பி-யில் விண்ணப்பித்து தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்துக் கொண்டனர்.

படிவம் 7 மூலம் 1,869 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து தங்களது பெயரை நீக்கம் செய்தனர். வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம் மற்றும் இடமாற்றம் செய்ய 4,246 பேர் படிவம் 8-ஐ பூர்த்தி செய்து விண்ணப்பித்தனர். இதன்படி மொத்தம் 16,513 பேர் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டனர். இது தொடர்பாக சந்தேகங்கள் ஏதும் இருப்பின் பொதுமக்கள் 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் கூடுதல் தகவல் பெறலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com