

சென்னை,
பிரதமர் நரேந்திரமோடிக்கு, தமிழக முன்னாள் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தின் நாடோடி பழங்குடி மக்களான நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் சமூகங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் சட்ட திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை வரவேற்கிறேன். இது நீண்ட கால கோரிக்கையும் கூட. இதன்மூலம் பழங்குடியினருக்கான சலுகைகளை இனி நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் சமுதாய மக்களும் பெறுவார்கள்.
இந்த கோரிக்கையை பலமுறை ஜெயலலிதா மத்திய அரசிடம் விடுத்துள்ளார். தற்போதைய மத்திய அமைச்சரவை ஒப்புதல் மூலம் ஜெயலலிதாவின் கோரிக்கை நிறைவேறி இருக்கிறது. இந்த முடிவின் மூலம் சமூகநீதியின் உருவகம் என்பதை நீங்கள் நிரூபித்து இருக்கிறீர்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.