கிளாம்பாக்கத்தில் கூடுதல் பேருந்துகள் - அமைச்சர் தலைமையில் ஆலோசனை

அனைத்து போக்குவரத்து மேலாளர்களுடன் இன்று தலைமை செயலகத்தில் அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

கிளாம்பாக்கம் பஸ் நிலையம் என்பது சென்னையில் உள்ள ஒரு பெரிய பேருந்து நிலையமாகும். இது கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என்று அழைக்கப்படுகிறது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தின் நெரிசலைக் குறைக்கும் நோக்கில் இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டது.

சில தினங்களுக்கு முன்னர் சொந்த ஊர்களுக்கு செல்ல பயணிகள்  கிளாம்பாக்கத்தில் வெகு நேரமாக காத்திருந்தும் எந்த பஸ்சும் வராததால் பொறுமையை இழந்து பயணிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

500க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டதால், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் கிளாம்பாக்கத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல போதிய பஸ்கள் இல்லை என பயணிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

இந்த நிலையில் அனைத்து போக்குவரத்து மேலாளர்களுடன் இன்று தலைமை செயலகத்தில் அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனை மூலம் கிளாம்பாக்கத்திற்கு கூடுதல் பஸ் வசதி அமைத்து தரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com