சென்னையில் கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூல்

சென்னையில் கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூல் தனியார் ஆஸ்பத்திரிக்கு மாநகராட்சி நோட்டீஸ்.
சென்னையில் கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூல்
Published on

சென்னை,

கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்த தனியார் ஆஸ்பத்திரிக்கு விளக்கம் கேட்டு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி சுகாதார துணை கமிஷனர் டாக்டர் மனீஷ் கூறியதாவது:-

சென்னையை சேர்ந்த 42 வயது நபர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அடையாறில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதலாக ரூ.1 லட்சத்து 99 ஆயிரத்து 807 வசூலிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த புகாரின் அடிப்படையில் அந்த ஆஸ்பத்திரிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் நோயாளியிடம் கூடுதலாக வசூலித்த தொகையை அவருக்கு திருப்பி வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல் இதுவரை சென்னையில் 10 தனியார் ஆஸ்பத்திரிகள் 16 நோயாளிகளிடம் கூடுதலாக பணம் வசூலித்தனர். மாநகராட்சியின் நடவடிக்கையால் அந்த ஆஸ்பத்திரிகளிடம் இருந்து ரூ.18.36 லட்சம் திருப்பி பெற்று தந்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com