கன்னியாகுமரி - ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு

பயணிகளின் வசதிக்காக இந்த ரெயிலில் தற்காலிகமாக ஒரு கூடுதல் 3-ம் அடுக்கு குளிர்சாதன பெட்டி இணைக்கப்பட உள்ளது.
ரெயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு
Published on

நாகர்கோவில்,

கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில், திருவனந்தபுரம் வழியாக ஸ்ரீமாதா வைஷ்ணோ தேவி காட்ரா இடையே ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் (16317/16318) ரெயில் இயங்கி வருகிறது. இந்த ரெயில் கன்னியாகுமரியில் இருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்படும். ஏராளமான பயணிகள் இந்த ரெயிலில் பயணம் செய்து வருகிறார்கள்.

கூடுதல் பெட்டிகள்

இந்த நிலையில் பயணிகளின் வசதிக்காக இந்த ரெயிலில் தற்காலிகமாக ஒரு கூடுதல் 3-ம் அடுக்கு குளிர்சாதன பெட்டி இணைக்கப்பட உள்ளது. அதன்படி 12-ந்தேதி மற்றும் 26-ந் தேதி ஆகிய 2 நாட்கள் கூடுதல் பெட்டியுடன் இந்த ரெயில் இயங்குகிறது. இதேபோல மறு மார்க்கத்தில் 15-ந் தேதியும், 29-ந் தேதியும் கூடுதல் பெட்டியுடன் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com