மின்சாரம் தாக்கி இறந்தவரின் குடும்பத்தினருக்கு கூடுதல் இழப்பீடு - ஐகோர்ட்டு உத்தரவு

செங்கேணி மரணத்துக்கு ரூ.14 லட்சத்து 50 ஆயிரம் இழப்பீடாக நிர்ணயம் செய்து உத்தரவிட்டார்.
மின்சாரம் தாக்கி இறந்தவரின் குடும்பத்தினருக்கு கூடுதல் இழப்பீடு - ஐகோர்ட்டு உத்தரவு
Published on: 

சென்னை,

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூரை அடுத்த நெமந்தம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செங்கேணி.இவர்,கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந்தேதி வயலுக்கு சென்றுவிட்டு, குளக்கரை வழியாக வீடு திரும்பினார். அப்போது, வீசிய பலத்த காற்றில் மின்சார கம்பி அறுந்து அவர் மீது விழுந்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது குடும்பத்துக்கு இடைக்கால நிவாரணமாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.

ஐகோர்ட்டு உத்தரவு

இந்தநிலையில், கூடுதல் இழப்பீடு கேட்டு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்கு செங்கேணியின் மனைவி தனலட்சுமி மற்றும் இரு மகன்கள் மனு கொடுத்தனர். அந்த மனு பரிசீலிக்கப்படாததால், சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி, செங்கேணி மரணத்துக்கு ரூ.14 லட்சத்து 50 ஆயிரம் இழப்பீடாக நிர்ணயம் செய்து உத்தரவிட்டார். ஏற்கனவே 5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதால், மீதமுள்ள ரூ.9 லட்சத்துக்கு 50 ஆயிரத்தை, 2021-ம் ஆண்டு முதல் 6 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com