வங்கி கடன் தவணை செலுத்த கூடுதல் அவகாசம் - ஆர்.சரத்குமார் வேண்டுகோள்

வங்கி கடன் தவணை செலுத்த கூடுதல் அவகாசம் வழங்க ஆர்.சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வங்கி கடன் தவணை செலுத்த கூடுதல் அவகாசம் - ஆர்.சரத்குமார் வேண்டுகோள்
Published on

சென்னை,

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆகஸ்டு 31-ந்தேதியுடன் ரிசர்வ் வங்கி அறிவித்த வங்கி கடன் தவணை செலுத்துவதற்கான கால அவகாசம் நிறைவடைகிறது. இதற்கு மேலும் 6 மாதம் கால அவகாசம் வழங்கியோ அல்லது மாதம் செலுத்த வேண்டிய கடன் தொகையிலிருந்து ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை திரும்ப செலுத்தவோ உத்தரவிட்டால் சிறப்பாக இருக்கும்.

கொரோனாவால் வியாபாரம், தொழில்முறை, வணிகம், பெரிய நிறுவனங்கள் என அனைத்து தரப்பும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிப்பதால், உரிய சலுகை அளித்தால், உழைக்கும் மக்கள் மன அழுத்தத்தை விடுத்து உற்சாகத்துடன் பணிசெய்வதுடன், கடன் தொகையை தவறாமல் திரும்ப செலுத்த ஊக்குவிப்பாக அமையும் என தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com