

சென்னை,
தமிழக அரசின் பதிவுத்துறை தலைவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-
சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் (டோக்கன்) ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தற்போது வைகாசி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினமான இன்று (வெள்ளிக்கிழமை) அதிகளவில் பத்தி ரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் ஒதுக் கீடு செய்யுமாறு பல்வேறு தரப்பு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.
அதன்படி இன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும், இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்களும், அதி களவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு டோக்கன்களுடன் ஏற்கெனவே வழங்கப் படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களும், கூடுதலாக 4 தட்கல் முன்ப திவு டோக்கன்களும் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக வழங்கிட உத்தரவி டப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.