தமிழகத்தில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிப்பு - இ பதிவு முறை அமலாகிறது

மே 17 ஆம் தேதி முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ- பதிவு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிப்பு - இ பதிவு முறை அமலாகிறது
Published on

சென்னை,

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை மாநிலத்தையே ஆட்டிப்படைத்து வருகிறது. ஒரு பக்கம் முழு ஊரடங்கு அமல்படுத்தியிருப்பது, மற்றொரு பக்கம் தடுப்பூசி போடும் பணிகளை விரிவுபடுத்துவது என தமிழக அரசு முழுமூச்சாக நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறது.

தமிழகத்தில், முழு ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருந்து வந்தாலும், நோய்த் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையிலும் தொற்று பரவல் குறைந்தபாடில்லை. தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை என நான்கு மணி நேரம் மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே நண்பகல் 12 மணி வரை அத்தியாவசிய கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது நேரம் குறைக்கப்பட்டுள்ளது. மற்ற கடைகளை தடை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கட்டுப்பாடுகள் குறித்த விவரம்:

  • நாளை முதல் டீக்கடைகள் இயங்க அனுமதியில்லை.
  • மே. 17 முதல் மாவட்டங்களுக்குள்ளும், வெளியேயும் பயணிக்க இ பதிவு கட்டாயம்
  • மளிகை, காய்கறி மற்றம் இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை இயங்க அனுமதி. மற்ற கடைகளுக்கான தடை தொடரும்.
  • காய் கறி, பூ, மற்றும் பழங்கள் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் இயங்க அனுமதி இல்லை.
  • அத்தியாவசிய பொருட்கள் வாங்க வீட்டிற்கு அருகே உள்ள கடைகளுக்கு மட்டுமே செல்ல வேண்டும்.
  • ஏ.டி.எம்.கள், பெட்ரோல் பங்குகள் எப்போதும் போல் செயல்படும்.
  • ஆன்லைன் மூலமாக விற்பனை செய்யும் மளிகை பொருட்கள், காய்,கறி விற்பனைக்கு காலை 10 மணி வரை அனுமதி.
  • ஆங்கில ,நாட்டு மருந்து கடைகள் வழக்கம் போல் செயல்படும்.
  • மின் வணிக நிறுவனங்கள் மதியம் இரண்டு மணி முதல் 6 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com