நாமக்கல், திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்கள் ஒதுக்கீடு

இரண்டு கல்லூரிகளுக்கும் தலா 50 இடங்கள் கூடுதலாக ஒதுக்கீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாமக்கல், திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்கள் ஒதுக்கீடு
Published on

சென்னை,

தமிழகத்தில மருத்துவ படிப்பு சேர்க்கைக்காக மாணவர்கள் இணைய வழியில விண்ணப்பம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக மாறியதன் காரணமாக ஒரு 700 மருத்துவ இடங்கள் அரசு ஒதுக்கீட்டில் இருந்து குறைகிறது என்ற ஒரு தகவலை மந்திரி ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில், தமிழகத்தில் 2 அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். இடங்கள் அதிகரிக்கப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. திருப்பூர் மற்றும் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரிகளில் தலா 50 எம்.பி.பி.எஸ். இடங்கள் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன. இதற்கான உத்தரவை மத்திய அரசு வழங்கி இருப்பதாக மருத்துவக் கல்வி இயக்குனராக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். இது 100 இடங்கள் அதிகரிப்பு என்பது தமிழக மாணவர்களுக்கு, குறிப்பாக அரசு பள்ளிகளில் படிக்கும் 7.5 விழுக்காட்டின் கீழ் வரக்கூடிய மாணவர்களுக்கு மிகுந்த ஒரு பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com