சார்பதிவாளர் அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன் வினியோகம்

அதிக அளவில் ஆவண பதிவு நடக்கும் 100 அலுவலகங்களில் 150 டோக்கன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சார்பதிவாளர் அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன் வினியோகம்
Published on

சென்னை,

சித்திரை மாதத்தின் விஷேச தினமான இன்று(புதன்கிழமை) அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால், சார்பதிவாளர் அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன் வழங்க பத்திரப்பதிவுத் துறை ஏற்பாடு செய்துள்ளது.

இதன்படி ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகத்துக்கு 150 டோக்கன், 2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகத்துக்கு 300 டோக்கன் வழங்கப்படும். அதிக அளவில் ஆவண பதிவு நடக்கும் 100 அலுவலகங்களில் 150 டோக்கன், கூடுதலாக 4 தட்கல் டோக்கன் தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com