மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக நீர் திறப்பு

தமிழகம் மற்றும் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக நீர் திறப்பு
Published on

தமிழகம் மற்றும் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. அதேபோல், தமிழகத்திலும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.

இதனால், சேலத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர் வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. இதையடுத்து, அணையின் 16 கண் மதகு வழியே திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மேட்டூர் அணையில் இருந்து நீரின் அளவு 55,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com