கைது உத்தரவை எதிர்த்து ஏடிஜிபி ஜெயராம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு

சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கைது உத்தரவை எதிர்த்து ஏடிஜிபி ஜெயராம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
Published on

சென்னை,

திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கத்தில் காதல் திருமணம் செய்த இளைஞரின் சகோதரன் கூலிப்படை மூலம் கடத்தப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. ஜெகன் மூர்த்தி, ஏடிஜிபி ஜெயராமன் உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இது தொடர்பாக கோர்ட்டு உத்தரவின்பேரில் ஏடிஜிபி ஜெயராமன் நேற்று கோர்ட்டு வளாகத்தில் வைத்தே கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராமனிடம் திருத்தணி டிஎஸ்பி அலுவலகத்தில் விடிய விடிய விசாரணை நடைபெற்றது. இதனையடுத்து ஏடிஜிபி ஜெயராமனை பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்ய தமிழக அரசுக்கு காவல்துறை பரிந்துரை செய்தது.

காவல்துறையினரின் பரிந்துரையின் பேரில் ஏடிஜிபி ஜெயராமை சஸ்பெண்ட் செய்து உள்துறை செயலாளர் உத்தவிட்டார். இந்த நிலையில், சிறுவன் கடத்தல் வழக்கில் தன்னை கைது செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டதை எதிர்த்து ஏடிஜிபி ஜெயராம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டு வழக்கை நாளை பட்டியலிட்டு விசாரிப்பதாக சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com