ஆதவ் அர்ஜுனா கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம்; தொண்டர்கள் உற்சாகம்

ஆதவ் அர்ஜுனா கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம்; தொண்டர்கள் உற்சாகம்
ஆதவ் அர்ஜுனா கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம்; தொண்டர்கள் உற்சாகம்
Published on

சென்னை

தமிழக அரசின் பதவிக்காலம் மே மாதம் 10-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதனை தொடர்ந்து, தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23-ந்தேதி ஒரே கட்டத்தில் நடத்தி முடிக்கப்படும். இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

கட்சிகள் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகளை முடித்து, தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், தேர்தலில் தனித்து போட்டியிடும் த.வெ.க.வின், வில்லிவாக்கம் தொகுதிக்கான வேட்பாளர் மற்றும் அக்கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளரான ஆதவ் அர்ஜுனா இன்று கேக் வெட்டி தன்னுடைய பிறந்த நாளை கட்சியினருடன் சேர்ந்து கொண்டாடினார்.

அப்போது, கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகத்துடன் இருந்தனர். ஆதவ் அர்ஜுனாவுக்கு சால்வை, பொன்னாடை, துண்டு உள்ளிட்டவற்றை போர்த்தியும், பிறந்த நாள் பரிசுகளை வழங்கியும் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். ஒரு சிலர் அவருடன் ஒன்றாக சேர்ந்து புகைப்படமும் எடுத்து கொண்டனர். சிலர் அவரிடம் ஆட்டோகிராப் (கையெழுத்து) வாங்கி கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com