ஆதவ் அர்ஜுனா எங்கள் குடும்பத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருகிறார்: மார்ட்டின் மகன் பதிவு

ஆதவ் அர்ஜுனா எங்கள் குடும்பத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருகிறார் என்று மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தெரிவித்துள்ளார்.
சென்னை
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குறித்த ஆதவ் அர்ஜுனாவின் விமர்சனத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது:-
என் தந்தையின் பணத்தை தவறான வழிகளுக்குப் பயன்படுத்திக்கொண்டே, எங்கள் குடும்பத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருகிறார்.
அவருக்கு இருக்கும் பதவி, பொருளாதார பேராசையைத் தீர்த்துக்கொள்ள, பிரசாந்த் கிஷோருடன் கூட்டணி அமைத்துக்கொண்டு பல கட்சிகளில் இணைந்து வருகிறார். அவர் செய்யும் கிறுக்குத்தனங்களுக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது தொடரும் பட்சத்தில், வழக்கு தொடரப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






