‘ரஜினிகாந்த் குறித்து அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளைப் பரப்பும் ஆதவ் அர்ஜுனா’: நயினார் நாகேந்திரன் கண்டனம்

அதைப் பார்த்துக் கொண்டு ரஜினியின் ரசிகர்கள் சும்மா இருக்க மாட்டார்கள் என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.
‘ரஜினிகாந்த் குறித்து அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளைப் பரப்பும்  ஆதவ் அர்ஜுனா’: நயினார் நாகேந்திரன் கண்டனம்
Published on

சென்னை,

நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளதாவது,

‘திரைப்படத் துறையில் 50 ஆண்டுகளாகக் கோலோச்சிவரும் சிறந்த கலைஞர், உலகளவில் தமிழ்த் திரைப்படத்தின் முகமாகத் திகழ்பவர், தாதா சாகேப் பால்கே விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, பத்ம பூஷண், பத்ம விபூஷண் போன்ற பல முக்கிய விருதுகளைப் பெற்று திரைத்துறையின் இமையத்தைத் தொட்டவர், சிறந்த ஆன்மிகவாதி எனப்பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். மேலும் அனைத்து மூத்த தலைவர்களின் அன்பையும், பாரதப் பிரதமர் நரேந்திர மோடியுடைய மரியாதையையும் பெற்றவராகத் திகழ்பவர்.

ஜாதி, மதம், மொழியைக் கடந்து அனைத்துத்தரப்பட்ட மக்களின் பேரன்பைப் பெற்றவர். அத்தகைய சிறந்த பண்பாளரைக் குறித்து தவெகவைச் சேர்ந்த ஆதவ் அர்ஜுனா பொதுவெளியில் தவறாகப் பேசுவது என்றும் ஏற்புடையதல்ல! அதைப் பார்த்துக் கொண்டு சூப்பர் ஸ்டாரின் ரசிகர்களும் சும்மா இருக்க மாட்டார்கள்!

பத்திரிகைகளின் கவனத்தைப் பெறுவதற்காக, தமிழக மக்களின் பேரன்பிற்குச் சொந்தக்காரரான ரஜினிகாந்த் குறித்து ஆதவ் அர்ஜுனா பேசியதை அக்கட்சியின் தலைவர் கண்டிப்பதோடு, இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்ற அறிவுரையும் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களிடம் ஆதவ் அர்ஜுனா மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்’.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com