போக்குவரத்து விதிகளை கடைபிடித்தால் விபத்துகளை தடுக்கலாம்

போக்குவரத்து விதிகளை கடைபிடித்தால் விபத்துகளை தடுக்கலாம் என வட்டார போக்குவரத்து அலுவலர் குமரவேல் கூறினார்.
போக்குவரத்து விதிகளை கடைபிடித்தால் விபத்துகளை தடுக்கலாம்
Published on

சிவகாசி, 

போக்குவரத்து விதிகளை கடைபிடித்தால் விபத்துகளை தடுக்கலாம் என வட்டார போக்குவரத்து அலுவலர் குமரவேல் கூறினார்.

கருத்தரங்கம்

சிவகாசி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் திருத்தங்கல் எஸ்.ஆர்.என். பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமர் தலைமை தாங்கினார்.

வட்டார போக்குவரத்து அலுவலர் குமரவேல் முன்னிலை வகித்தார். பள்ளியின் தலைமையாசிரியர் கணேசபாண்டியன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் திருத்தங்கல் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் கார்த்திகேயன், நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையம் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

போக்குவரத்து விதிகள்

நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர் குமரவேல் பேசியதாவது:-

மாணவர்கள் போக்குவரத்து விதிகளை தெரிந்து கொள்ள வேண்டும். அத்துடன் அதனை கடைபிடிக்க வேண்டும். ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்ட கூடாது. ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிள்களை ஓட்ட வேண்டும்.

சாலையை கடக்கும் முன் இருபுறமும் பார்த்து வாகனங்கள் வராத போது கடக்க வேண்டும். போக்குவரத்து விதிகளை கடைபிடித்தால் விபத்துகளை தடுக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முடிவில் ஆசிரியர் மலைக்கனி நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com