மானியம் பெறுவதற்கு ஆதிதிராவிடர்- பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம்

மானியம் பெறுவதற்கு ஆதிதிராவிடர்- பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மானியம் பெறுவதற்கு ஆதிதிராவிடர்- பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம்
Published on

தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்திடும் வகையில் மின் வாகனம், உறைவிப்பான், குளிர்விப்பான் போன்ற உபகரணங்களை கொள்முதல் செய்து, ஆவின் பாலகம் அமைக்க நிர்ணயிக்கப்பட்ட திட்டத்தொகை ரூ.3 லட்சத்தில் 30 சதவீதம், அதாவது ரூ.90 ஆயிரம் மானியத்தொகையாக வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பதாரர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராக இருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 65 வயது வரை இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கூடுதல் செலவினத்தை ஈடுசெய்ய மற்றும் அதிகபட்ச மானியத்தொகை சென்றடைய, ஆதிதிராவிடர் தனி நபர்களுக்கான திட்டத்தொகையில் 30 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் மானியமும் மற்றும் பழங்குடியினர் தனி நபர்களுக்கான திட்டத்தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.3 லட்சத்து 75 ஆயிரம் மானியமும் விடுவிக்கப்படும். விண்ணப்பதாரர் மற்றும் அவரது குடும்பத்தினர் தாட்கோ திட்டத்தின் கீழ் இதுவரை மானியம் பெற்றிருக்கக்கூடாது. மேற்காணும் திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ளவர்கள் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளின் அடிப்படையில் விண்ணப்பிக்க பெரம்பலூர் மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி, உரிய விவரத்தினை பெற்று புகைப்படம், சாதிச்சான்று, வருமானச்சான்று, குடும்ப அட்டை அல்லது இருப்பிடச்சான்று, ஆதார் அட்டை ஆகிய சான்றுகளுடன் http://application.tahdco.com, http://fast.tahdco.com என்ற ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு தாட்கோ, மாவட்ட மேலாளர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04328-276317 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com