வடுவூர் கோதண்டராமர் கோவிலில் ஆடி திருமஞ்சனம்

வடுவூர் கோதண்டராமர் கோவிலில் ஆடி திருமஞ்சனம்
வடுவூர் கோதண்டராமர் கோவிலில் ஆடி திருமஞ்சனம்
Published on

வடுவூர் கோதண்டராமர் கோவிலில் ஆடி மாதம் தொடங்கி 1 மாத காலத்திற்கு தினமும் திருமஞ்சனம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நேற்று கோவில் வளாகத்தில் திருமஞ்சனம் நடந்தது. இதையொட்டி சீதாதேவி, லட்சுமணன், கோதண்டராமருக்கு பால், தயிர், மஞ்சள், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com