ஆதித்தனார் கல்லூரியில் உலக யோகா தின விழா

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் உலக யோகா தின விழா கொண்டாடப்பட்டது.
ஆதித்தனார் கல்லூரியில் உலக யோகா தின விழா
Published on

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் தேசிய மாணவர் படை சார்பில், உலக யோகா தின விழா நடந்தது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கி, விழாவை தொடங்கி வைத்தார். தேசிய மாணவர் படையின் தரைப்படை அதிகாரி லெப்டினன்ட் சிவமுருகன் வரவேற்று பேசினார். கணினி அறிவியல் துறைத்தலைவர் யோகாவின் முக்கியத்துவம் குறித்து பேசினார். டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி பேராசிரியர்கள் நெல்சன் துரை, ஜெயகணேஷ் ஆகியோர் தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு யோகாசன பயிற்சி அளித்தனர். தேசிய மாணவர் படை கப்பல் படை அதிகாரி சப்-லெப்டினன்ட் சிவ இளங்கோ நன்றி கூறினார்.

தூத்துக்குடி 29-வது தரைப்படை கம்பெனி ஆபிசர் கமெண்டிங் லெப்டினன்ட் கர்னல் பிரதோஷ் உத்தரவின்பேரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இயற்பியல் துறைத்தலைவர் பாலு, என்.சி.சி. யூனிட் ஹவில்தார் முருகன், தேசிய மாணவர் படை அதிகாரிகள் சேக்பீர் முகம்மது காமீல், சத்யன், ஐசக் கிருபாகரன், சூரிய பொன்முத்து சேகரன் மற்றும் ஆதித்தனார் கல்லூரி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி, கே.ஏ. மேல்நிலைப்பள்ளி, டி.டி.டி.ஏ. மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 200 தரைப்படை மற்றும் கப்பல்படை மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தேசிய மாணவர் படை அதிகாரிகள் சிவமுருகன், சிவ இளங்கோ மற்றும் மாணவர்கள் செய்து இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com