சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

தமிழக சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு ஒத்திவைத்தார்.
சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
Published on

சென்னை,

2023-24-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கடந்த மாதம் 20-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

இதையடுத்து தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 21-ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நிறைவடைந்துள்ளது. இதையடுத்து சட்டப்பேரவை கூட்டத்தொடரை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு ஒத்தி வைத்தார்.

17 சட்ட மசோதாக்கள் இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com