ஆயுஷ் துணை மருத்துவ பட்டயப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை - விண்ணப்பங்கள் வரவேற்பு

இணையவழியில் மட்டுமே விண்ணப்பப் படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுஷ் துணை மருத்துவ பட்டயப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை - விண்ணப்பங்கள் வரவேற்பு
விண்ணப்பங்கள்
Published on: 

சென்னை,

2026-2027-ம் கல்வியாண்டிற்கான ஆயுஷ் டிப்ளமோ (DIP / DNT) பட்டயப்படிப்புகளுக்கான சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

பட்டயப்படிப்புகள்

2026-2027-ஆம் கல்வியாண்டிற்கு, சென்னை மற்றும் பாளையங்கோட்டையில் உள்ள அரசு ஆயுஷ் துணை மருத்துவ படிப்புப் பள்ளிகளில் உள்ள இடங்களுக்கான (DIP / DNT) பட்டயப்படிப்புகள் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பங்கள் (Online Applications) தகுதியுள்ளவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.

இணையவழியில் மட்டுமே விண்ணப்பிக்கவும்

(DIP / DNT) பட்டயப்படிப்புகளுக்கான தகவல் தொகுப்பேட்டினை, www.tnayushselection.org. என்கின்ற வலைதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இணையவழியில் மட்டுமே (Online Applications) விண்ணப்பப் படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். வேறு எந்த வழிகளிலும் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

வலைதளம்

மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள், விண்ணப்ப கட்டணம் மற்றும் பிற கட்டண விவரங்கள், கலந்தாய்விற்கான அட்டவணை மற்றும் பிற தகவல்களினை www.tnayushselection.org. என்கின்ற வலைதளத்தில் உள்ள உரிய தகவல் தொகுப்பேட்டில் அறியலாம்.

அசல் சான்றிதழ்களை கையடக்க ஆவண / புகைப்பட வடிவத்தில் பதிவேற்றவும்

விண்ணப்பிக்கும் முன் தகவல் தொகுப்பேட்டினை முழுமையாக படித்து சரியான தகவல்களை பதிவேற்றவும் மற்றும் தேவையான இடங்களில் அனைத்து அசல் சான்றிதழ்களை PDF/JPEG வடிவில் பதிவேற்றவும். விண்ணப்பக் கட்டணம், இணையவழி கலந்தாய்வுக் கட்டணம், கல்விக் கட்டண முன்பணம் இவை அனைத்தும் இணையவழி மூலமாக மட்டுமே செலுத்தவேண்டும்.

படிப்புப் பிரிவு : ஆயுஷ் பட்டயப்படிப்புகள் (DIP-மருந்தாளுநர் / DNT-நர்சிங் தெரபி)

படிப்பிற்கான காலம் : 2½ ஆண்டுகள்

படிப்பிற்கான கல்வித்தகுதி : 10+2;

பள்ளிகளின் விவரங்கள்: அரசு ஆயுஷ் துணை மருத்துவ படிப்புப் பள்ளிகள்- 02 (சென்னை – 01 மற்றும் பாளையங்கோட்டையில் – 01)

அரசு சிறப்பு ஒதுக்கீட்டின்கீழ் விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் மட்டும், இணையவழியில் விண்ணப்பித்த பிறகு, அந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, கோரப்பட்டுள்ள அனைத்து சான்றிதழ்களின் சுய சான்றொப்பமிட்ட நகல்களையும் இணைத்து செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநர் அலுவலகம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை-600 106 என்ற முகவரிக்கு 29.10.2026 மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பித்தல் / வந்து சேர வேண்டும்.

அறிவிக்கை நாள் 15.10.2026 முதல் இணையவழி விண்ணப்பம் பதிவு செய்ய தொடங்கும் நாள் இணையவழி விண்ணப்பம் பதிவு செய்ய கடைசி நாள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 29.10.2026

அரசு சிறப்பு ஒதுக்கீட்டின்கீழ் விண்ணப்பிக்க இணையவழி விண்ணப்பத்துடன் அனைத்து சுய சான்றொப்பமிட்ட சான்றிதழ்களுடன் தபால் / கூரியர் சேவை வாயிலாக சமர்ப்பிக்கவோ அல்லது நேரில் சமர்ப்பிக்கவோ கடைசி நாள் 29.10.2026 மாலை 5.00 மணி வரை

(DIP / DNT) பட்டயப்படிப்புகள் கலந்தாய்வு குறித்த விரிவான விவரங்களுக்கு உரிய தகவல் தொகுப்பேட்டினைப் பார்க்கவும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com