7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை

விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரியில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை
Published on

விக்கிரவாண்டி

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுரியில் 2022-23-ம் ஆண்டிற்கான மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளியில் படித்து 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் தேர்வான மாணவர்கள் பூவராகவன், பூவரசன், சிவகாம வள்ளி, சுகந்தி, தாரணி, தேவதர்ஷினி ஆகிய 6 பேருக்கு கல்லுரி முதல்வர் கீதாஞ்சலி மருத்துவ படிப்பில் சேர்வதற்கான ஆணையை வழங்கி பாராட்டினார். அப்போது முதல்வர் சங்கீதா, துணை மருத்துவ கண்காணிப்பாளர் புகழேந்தி, நிலைய மருத்துவ அலுவலர் ரவிக்குமார், உதவி நிலைய மருத்துவ அலுவலர்கள் வெங்கடேசன், ஸ்ரீராம், நிர்வாக அலுவலர் சிங்காரம், இளநிலை நிர்வாக அலுவலர் ஸ்ரீவாட்சன், கண்காணிப்பாளர் ரபியேசுதாஸ் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com