9-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை - தமிழக அரசு அரசாணை வெளியீடு

பாலிடெக்னிக் கல்லூரிகளில் 9-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
9-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை - தமிழக அரசு அரசாணை வெளியீடு
Published on

சென்னை,

கொரோனா பரவல் காரணமாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், 9-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

அந்த அரசாணையில், 9-ம் வகுப்பு மதிப்பெண்களின் தரவரிசை அடிப்படையில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி அளிக்கப்படுவதாகவும், இட ஒதுக்கீடு முறையை பின்பற்றி மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com