நகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கு மாணவர்கள் சேர்க்கை

தேனி கூட்டுறவு மேலாண்மை நிலயத்தில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
நகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கு மாணவர்கள் சேர்க்கை
Published on

தேனி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஆரோக்கியசுகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தேனி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2022-23-ம் கல்வியாண்டில் பகுதி நேர நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும் பயிற்சிக்கான மாணவர்கள் சேர்க்கை நடந்து வருகிறது. இப்பயிற்சியில் உலோகவியல், உலோகத்தின் பயன்பாடு. தங்கத்தை பற்றிய அடிப்படை விவரம், தங்கத்தின் விலை, தங்கத்தை கணக்கிடும் முறை, தங்கத்தை உரசியும் உரசாமலும் தரம் அறியும் முறை, நகைகளின் வகைகளை கண்டறிதல், வங்கிகளில் நகைக் கடன் வழங்கும் முறை, ஹால்மார்க் முத்திரை, அடகு பிடிப்போர் நடைமுறைச் சட்டம் மற்றும் விதிகள் போன்ற பாடங்கள் பயிற்சியளிக்கப்படுகிறது. பயிற்சியின் முடிவில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் சான்றிதழ் வழங்கப்படும். இந்த பயிற்சி முடித்தவர்கள் தேசிய மற்றும் கூட்டுறவு வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்களில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றவும், அடகு மற்றும் ஆபரணக் கடை மற்றும் நகை வணிகம் செய்யவும் வாய்ப்புகள் உள்ளன. இதற்கு குறைந்த பட்ச கல்வி தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்த பட்ச வயது 18. அதிகபட்ச வயது வரம்பு இல்லை. ஆண், பெண் இருபாலரும் பயிற்சியில் சேரலாம். மேலும் விவரங்களுக்கு ஆண்டிப்பட்டி தாலுகா அலுவலகம் அருகில் உள்ள, தேனி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com