அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலி இடங்களுக்கு மாணவர் சேர்க்கை

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலி இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலி இடங்களுக்கு மாணவர் சேர்க்கை
Published on

காரைக்குடி, 

காரைக்குடி அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் 2 கட்ட கலந்தாய்வு முடிந்து பிட்டர், டர்னர் மெசினிஸ்ட், வயர் மேன், அட்வான்ஸ்டு சி.என்.சி. மெஷின் டெக்னீசியன், பேசிக் டிசைனர் அண்ட் விசுவல் வெரிபையர் போன்ற 2 வருட தொழில் பிரிவுகளுக்கும் வெல்டர், கோபா, மேனுபாக்சரிங் ப்ராசஸ் கண்ட்ரோல் மற்றும் டிஜிட்டல் மேனுபாக்சரிங் டெக்னீசியன் என்ற ஓராண்டு தொழிற் பிரிவுகளுக்கும் ஒரு சில இடங்கள் காலியாக உள்ளது.

எனவே மேற்கண்ட தொழிற்பரிவுகளில் சேர விருப்பமுள்ள 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தற்போது முதல் காரைக்குடி அரசு தொழிற்பயிற்ச்சி நிலையத்திற்கு நேரடியாக வந்து சேர்க்கையில் பதிவு செய்து கொள்ளலாம். பயிற்சி பெறுகிற மாணவர்களுக்கு இலவச பஸ் கட்டண சலுகை, விலையில்லா சைக்கிள், சீருடைகள், காலணி, வரைபட கருவிகள், நோட்டு புத்தகங்கள் வழங்கப்படும். மேலும், ஆண் பயிற்சியாளர்களுக்கு மாதம் ரூ.750, பெண் பயிற்சியாளர்களுக்கு மாதம் ரூ.1750 உதவி தொகையாக வழங்கப்படும் என கலெக்டர்ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com