பழங்குடியினர் நல விடுதிகளில் மாணவர் சேர்க்கை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பழங்குடியினர் நல விடுதிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க 30-ந்தேதி கடைசி நாள் ஆகும்.
பழங்குடியினர் நல விடுதிகளில் மாணவர் சேர்க்கை
Published on

கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் சங்கராபுரம் மாணவர் விடுதி, புதுப்பட்டு மாணவர் விடுதி மற்றும் சங்கராபுரம் தொழிற்பயிற்சி மாணவர் விடுதிகளில் (2023-2024)-ம் கல்வி ஆண்டிற்கான விடுதி சேர்க்கை நடைபெறுகிறது. மேலும் இவ்விடுதிகளில் மாணவர்கள் தங்கி படிப்பதற்கு http://tnadw.hms.in என்ற விடுதி மேலாண்மை இணையதளம் மூலமாகவோ அல்லது விடுதி காப்பாளர் மூலம் நேரடியாகவோ வருகிற 30-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேற்கண்ட தகவல் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com