அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை
Published on

கரூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விருப்பம் உள்ளவர்கள் https://skilltraining.tn.gov.in/DET என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். தற்போது காலியாக உள்ள இடங்களை நிரப்ப நேரடி சேர்க்கை வருகிற 16-ந்தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் வந்து சேர்ந்து கொள்ளலாம். தையல் தொழில்நுட்ப பயிற்சியில் சேர 8-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சி காலம் ஓராண்டு (மகளிர் மட்டும்). கணினி தொழில்நுட்ப பயிற்சியில் சேர 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சி காலம் ஓராண்டு (மகளிர் மட்டும்). மெக்கானிக் ஆட்டோ பாடி ரிப்பேர் பயிற்சியில் சேர 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சி காலம் ஓராண்டு (ஆண், பெண் இருபாலரும்). அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை ரூ.750. இலவச பஸ் கட்டண சலுகை, மிதிவண்டி, பாடப்புத்தகங்கள், சீருடைகள், காலணிகள், வரைபடக் கருவிகள் அரசால் வழங்கப்படும். மேலும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களின் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களை கரூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை 04324-222111, 75388 77430 ஆகிய தொலைபேசி எண்கள் மூலமோ அல்லது நேரிலோ தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com