அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழா

ஆற்காடு ஒன்றியம், மேல்விஷாரம் பகுதிகளில் அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.
அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழா
Published on

ஆற்காடு கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பழைய வட்டார வளர்ச்சி அலுவலகம், மேற்கு ஒன்றியம் சார்பில் உப்புபேட்டை கிராமம், மேல்விஷாரம் நகர கிழக்கு பகுதி சார்பில் அண்ணாசாலை, மேற்கு பகுதி சார்பில் கத்தியவாடி கூட்ரோடு ஆகிய பகுதிகளில் அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சுகுமார் கலந்துகொண்டு அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலிலதா உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, கட்சி கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு, அன்னதானம் வழங்கினார்.

நிகழ்ச்சிகளில் முன்னாள் மாவட்ட செயலாளர் சுமைதாங்கி சி.ஏழுமலை, முன்னாள் எம்.எல்.ஏ. வி.கே.ஆர்.சீனிவாசன், கிழக்கு ஒன்றிய செயலாளர் வளவனூர் எஸ்.அன்பழகன், மேற்கு ஒன்றிய செயலாளர் தாழனூர் என்.சாரதி என்கிற ஜெயசந்திரன், மேல்விஷாரம் கிழக்கு நகர செயலாளர் எம்.எஸ்.விஜி, மேல்விஷாரம் மேற்கு நகர செயலாளர் ஏ.இப்ராஹீம் கலிலுல்லா, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் தா.கு.கணேசன், நிர்வாகிகள் பாலாஜி கீர்த்தி, பாஸ்கரன், ரவி, மன்சூர்பாஷா, அக்பர்பாஷா, ஷபீக் அஹமது, நகரமன்ற உறுப்பினர்கள் ஜமுனாராணிவிஜி, லட்சுமி சோமசுந்தரம் மற்றும் அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com