அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்

செங்கோட்டையில் அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடந்தது
அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்
Published on

செங்கோட்டை:

செங்கோட்டை தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் வைத்து அ.தி.மு.க. தொடங்கி 50 ஆண்டு நிறைவு ஆனதை முன்னிட்டு பொன்விழா ஆண்டை சிறப்பாக கொண்டாடுவது குறித்த ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான செ.கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா தலைமை தாங்கி பேசினார். மண்டல தகவல் தொழில் நுட்ப பிரிவு துணை செயலாளர் சிவஆனந்த் இணைச்செயலாளா சண்முகப்ரியா, துணைச்செயலாளா பொய்கை சோ.மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனா. மாவட்ட பொருளாளா சண்முகையா வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் கண்ணன் என்ற ராஜீ, பரமகுருநாதன், ஒன்றிய செயலாளர்கள் எஸ். ஆர்.ராமசந்திரன், வசந்தம் முத்துபாண்டியன், செல்லப்பன், ரமேஷ், ஜெயகுமார், வேல்முருகன், செல்வராஜ், மகாராஜன், நகர செயலாளர்கள் எம்.கே.முருகன், ஆறுமுகம், பரமேஸ்வர பாண்டியன், பேரூர் செயலாளர்கள் டாக்டர் சுசீகரன், ஈ.நல்லமுத்து, முத்துகுட்டி, மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் ஞானராஜ், தனபால், ஜாஹீர் உசேன், வழக்கறிஞர் அருண், டாக்டர் திலீபன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி குருசேவ், சங்கரன்கோவில் நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் சவுந்தர் மற்றும் நகர, ஒன்றிய, பேரூர், சார்பு அணி நிர்வாகிகள் உள்பட பலா கலந்து கொண்டனர்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com