அ.தி.மு.க. மற்றும் துணை அமைப்புகளுக்கு நிர்வாகிகள் நியமனம் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணைஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது.
அ.தி.மு.க. மற்றும் துணை அமைப்புகளுக்கு நிர்வாகிகள் நியமனம் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
Published on

சென்னை,

அ.தி.மு.க. மற்றும் சார்பு அமைப்புகளுக்கு துணை நிர்வாகிகள் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள். அதன்படி, அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணைச் செயலாளராக சா.கலைப்புனிதன் (தலைமைக் கழக பேச்சாளர், வடசென்னை தெற்கு (மேற்கு) மாவட்டம்) நியமிக்கப்படுகிறார்.

அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்களாக ஆர்.பி.மருதராஜா (பெரம்பலூர் மாவட்டம்), டாக்டர் எஸ்.முத்தையா (பரமக்குடி சட்டமன்றத் தொகுதி, ராமநாதபுரம் மாவட்டம்), ராயபுரம் மனோ (சென்னை மாநகராட்சி முன்னாள் வார்டு உறுப்பினர், வடசென்னை மாவட்டம்), எம்.சி.தாமோதரன் (முன்னாள் அமைச்சர், கடலூர் மாவட்டம்) ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.

எம்.ஜி.ஆர். பேரவை இணைச் செயலாளராக பொன்.ராஜா (பொன்னேரி தொகுதி), துணைச் செயலாளராக பி.சந்தானகிருஷ்ணன் (சென்னை மாநகராட்சி முன்னாள் வார்டு உறுப்பினர்), எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளராக இ.லட்சுமி நாராயணன் (சென்னை மாநகராட்சி முன்னாள் வார்டு உறுப்பினர்), சிறுபான்மையினர் நலப் பிரிவு துணை செயலாளராக எம்.ஏ.சேவியர் (திருவள்ளூவர் நகர், கொடுங்கையூர்) ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.

கட்சியினர் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com