

கடையநல்லூர்:
எடப்பாடி பழனிசாமி கூட்டிய அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியதையொட்டி, பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். கடையநல்லூர் நகர செயலாளர் எம்.கே.முருகன் தலைமையில் அ.தி.மு.க.வினர் கடையநல்லூர் அரசு மருத்துவமனை பஸ் நிறுத்தம் முன்பு பட்டாசு வெடித்து கொண்டாடினர். பின்னர் பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு இனிப்பு வழங்கினர். நிகழ்ச்சியில் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.