விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

நெல்லையில் விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
Published on

நெல்லை வண்ணார்பேட்டை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் நேற்று அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு மற்றும் தி.மு.க. அரசின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேச ராஜா தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன், சுதா கே.பரமசிவன், ஏ.கே.சீனிவாசன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் நாராயண பெருமாள், கல்லூர் வேலாயுதம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ரெட்டியார்பட்டி நாராயணன், ஆர்.பி.ஆதித்தன், கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர் முத்தையா, மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், பொருளாளர் சவுந்தரராஜன், இளைஞர் அணி செயலாளர் பால்துரை, மகளிர் அணிச்செயலாளரும், திசையன்விளை பேரூராட்சி தலைவருமான ஜான்சிராணி, நெல்லை மாநகராட்சி கவுன்சிலர் சந்திரசேகர், முன்னாள் துணை மேயர் ஜெகநாதன் என்ற கணேசன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைசெயலாளர் உவரி ராஜன் கிருபாநிதி, ஒன்றிய செயலாளர்கள் முத்துக்குட்டி பாண்டியன், கே.பி.கே.செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் செவல் முத்துசாமி, வக்கீல் ஜெயபாலன், ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் அந்தோணி அமலராஜா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்கள் தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.

அப்போது அ.தி.மு.க. தொண்டர்கள் சிலர் விலைவாசி உயர்வை கண்டிக்கும் வகையில் காய்கறிகளை மாலையாக கட்டி, அதை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com