அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி திடீர் ஆலோசனை

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இந்த ஆலோசனை நடைபெற்றது.
அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி திடீர் ஆலோசனை
Published on

சென்னை,

சென்னை மற்றும் புறநகர் பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் இந்த ஆலோசனை நடைபெற்றது.

9 மாவட்ட செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் ஆகியோரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். தேர்தல் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது, தொகுதி நிலவரம் உள்ளிட்டவை குறித்து இந்த கூட்டத்தில்  ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com