அ.தி.மு.க. நிர்வாகி கொலை: தி.மு.க. பெண் கவுன்சிலர் தலைமறைவு

தி.மு.க. பெண் கவுன்சிலரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அ.தி.மு.க. நிர்வாகி கொலை: தி.மு.க. பெண் கவுன்சிலர் தலைமறைவு
Published on

சேலம்,

சேலம் தாதகாப்பட்டி காமராஜர் நகரை சேர்ந்தவர் சண்முகம் (வயது 62). இவர், கொண்டலாம்பட்டி பகுதி அ.தி.மு.க. செயலாளராக இருந்தார்.

கடந்த 3-ந் தேதி இரவு 2 மோட்டார்சைக்கிள்களில் வந்த கும்பல், சண்முகத்தை அவரது வீட்டிக் முன்பு வெட்டி கொலை செய்தது.இந்த கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த தி.மு.க. கவுன்சிலர் தனலட்சுமியின் கணவர் சதீஷ்குமார் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தடை செய்யப்பட்ட லாட்டரியை சதீஷ்குமார் விற்பது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தது உள்ளிட்ட காரணங்களால் சண்முகம் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இந்த கொலையில் தி.மு.க. கவுன்சிலர் தனலட்சுமி மற்றும் தாதகாப்பட்டியை சேர்ந்த கிச்சா என்கிற கிருஷ்ணமூர்த்தி, மகேந்திரன், அஜீத் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் 4 பேரும் தலைமறைவாக உள்ளனர். அவர்கள் கேரள மாநிலம் பாலக்காட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அவரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டியுள்ளனர். அதேநேரத்தில் போலீசாரின் இன்னொரு தனிப்படை ஊட்டிக்கும் விரைந்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com