அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு: எடப்பாடி பழனிசாமியின் மனு தள்ளுபடி


அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு: எடப்பாடி பழனிசாமியின் மனு தள்ளுபடி
x
தினத்தந்தி 1 Aug 2025 12:12 PM IST (Updated: 1 Aug 2025 4:37 PM IST)
t-max-icont-min-icon

கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று நீதிபதி கூறினார்

சென்னை

2022ம் ஆண்டு அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களால் அக்கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

இதனிடையே, பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது உள்ளிட்ட அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இதனிடையே, அப்போது, திண்டுக்கல் சூரியமூர்த்தி அதிமுகவின் அடிப்படை உறுப்பினரே இல்லை. வேறு கட்சியை சேர்ந்தவர். ஆகையால் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து சூரியமூர்த்தி தொடர்ந்த வழக்கை மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது

இந்த வழக்கு இன்று சென்னை உரிமையியல் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிமுக கட்சி விதிகளின்படி பொதுச்செயலாளர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும். அதிமுக கட்சி விதிகளின் படி உறுப்பினர் அட்டையை வழங்க எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரமே இல்லை என்று சூரியமூர்த்தி தரப்பில் வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும். விதிகளின்படி பொதுச்செயலாளர் தேர்வானார் என தெரிவிக்கவில்லை. பொதுக்குழு தீர்மானம் மூலம் பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்ததற்கு எதிரான வழக்கு செல்லும் என்று கூறினார்.

மேலும், அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கை நிராகரிக்கக்கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடிசெய்தார்.

1 More update

Next Story