அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை

அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை
Published on

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., அலுவலகத்தில் நேற்று இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கையொப்பமிட்ட அ.தி.மு.க., புதிய உறுப்பினர் அட்டையை மாவட்ட அமைப்பாளர்கள், சார்பு அமைப்பாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்டோருக்கு அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், மத்தியில் பா.ஜனதா கட்சியுடன் கூட்டணி தர்மம் என்ற வகையில் அவர்களை நாங்கள் விமர்சிக்கவில்லை. அனைவரும் ஒன்றிணைந்து இணக்கமாக ஒரே குறிக்கோளோடு இந்தியாவை உயர்நிலைக்கு கொண்டு செல்லும் வழியில் பாரத பிரதமராக மோடியை மீண்டும் தேர்ந்தெடுக்க வேண்டும். திராவிட கட்சிகள் ஆட்சியில் தமிழகம் வளர்ச்சி பெறவில்லை என குற்றச்சாட்டுவது தவறு. தி.மு.க., வில் மூத்த அமைச்சர்களை கூட அடிமைகளாக வைத்துள்ளனர். அங்கு உட்கட்சி ஜனநாயகம் கூட இல்லை. ஆனால் அனைவருக்கும் சமஉரிமை, உழைப்புக்கான அங்கீகாரம் கொடுப்பது அ.தி.மு.க. மட்டும்தான் என்றார்.

அப்போது கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., தமிழ்செல்வம் எம்.எல்.ஏ. மாவட்ட அவைத் தலைவர் காத்தவராயன், மாநில பொதுகுழு உறுப்பினர் கே.பி.எம். சதீஷ், முன்னாள் எம்.எல்.ஏ. மனோரஞ்சிதம் நாகராஜ், முன்னாள் நகராட்சி தலைவர் தங்கமுத்து, ஒன்றிய செயலாளர்கள் சோக்காடி ராஜன், கன்னியப்பன், மற்றும் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com