

திருவொற்றியூர்,
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளான நேற்று சென்னை ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம். அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த 6 பெண் குழந்தைகள், 2 ஆண் குழந்தைகள் உள்பட 8 குழந்தைகளுக்கு அமைச்சர் ஜெயக்குமார் தங்க மோதிரம் அணிவித்தார். பின்னர் குழந்தைகளின் தாய்மார்களுக்கு வாழ்த்து தெரிவித்து பரிசு பொருட்கள் வழங்கினார்.